கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வண்ணமாக மக்கள் அதிகம் புழங்கும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இன்று வழக்கத்திற்கு மாறாக 500க்கும் குறைவான நபர்களே வந்து சென்றனர்.
கரோனா தொற்று பரவாமல் இருக்க வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குறிப்பாக வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியருடைய நான்கு சக்கர வாகனத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க... கரோனா வைரஸ் தடுப்பது எப்படி? - குமரி ஆட்சியர் ஆலோசனை