கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய் தொற்று தொடர்பாக கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அதேபோல் இருசக்கர வாகனங்களில் வரும்போதும், பொது இடங்களுக்குச் செல்லும்போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறுவோரிடமிருந்து அபராதமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் - கரூர் மாவட்ட ஆட்சியர்
கரூர்: முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.