ETV Bharat / state

மனு கொடுக்கவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ வசதி- கரூர் ஆட்சியர் அசத்தல்

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச ஆட்டோ வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

karur-collector-prabhusangar-caused-free-auto-facility-for-disability-person
மனு கொடுக்கவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ வசதி- கரூர் ஆட்சியர் அசத்தல்
author img

By

Published : Sep 14, 2021, 11:30 PM IST

கரூர்: செப்டம்பர் 1ஆம் தேதி ஈடிவி பாரத் செய்தித்தளத்தில், மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணிக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடந்த 20 ஆண்டு காலமாக சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக செய்தி வெளியிட்டோம்.

இந்த செய்தி எதிரொலியாக, செப்டம்பர் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள வாயில் கதவு முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதியை ஆட்சியர் ஏற்படுத்தி அதற்கென ஒரு தனி ஊழியரை நியமித்தார்.

karur-collector-prabhusangar-caused-free-auto-facility-for-disability-person
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ வசதி

இந்நிலையில், நேற்று(செப். 13) கோரிக்கை மனு அளிக்கவரும் மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு இலவச ஆட்டோக்களை மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்திக்கொடுத்தார்.

இந்த இரண்டு ஆட்டோக்களில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த ஆட்டோ கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மேற்பார்வையில் இயக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி தடுப்பூசி, அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு என அதிரடி நடவடிக்கையில் ஆட்சியர் பிரபுசங்கர் ஈடுபட்டு வருவது பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ”பொதுமக்கள் குறைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும்” - கரூர் ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.