தமிழ்நாட்டில் தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று சேவல் சண்டை போட்டி நடைபெறும்.
இந்தச் சேவல் சண்டையானது கடந்த ஆண்டு முந்தைய ஆண்டுவரை நீதிமன்றம் அனுமதி அளிக்காமல் தடை உத்தரவு இருந்துவந்தது. இதனால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சேவல் சண்டை நடைபெறவில்லை.
தற்பொழுது, சென்ற ஆண்டு (2020) அனுமதி வழங்கியதன் மூலம் சேவல் சண்டை சில கட்டுப்பாடுகளுடன்கூடிய விதிமுறைகளுடன் நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டும் (2021) சில கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 13, 14, 15 ஆகிய மூன்று நாள்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க...ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி-மத்திய அரசு