ETV Bharat / state

கர்நாடக எம்எல்ஏ 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார்: ஜோதிமணி! - ஜோதிமணி

கரூர்: கர்நாடகாவில் எம்எல்ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார், அவரை தனியாக விமானம் மூலம் அழைத்து செல்கின்றனர் என்று கரூர் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.

Karnataka
author img

By

Published : Jul 13, 2019, 4:30 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடெங்கிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவருகின்றன. சிறு குறு நடுத்தரத் தொழில்கள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வேலைவாய்ப்பின்மை 6.01 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் சீன அரசு ஆக்கிரமிப்பை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவையும் இந்திய ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பது ஒன்றே முக்கியமான வேலையாக செய்து வருவது வெட்கப்பட கூடியது மிகவும் கண்டனத்துக்குரியது.

கர்நாடக எம்எல்ஏ 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார்: ஜோதிமணி!

கர்நாடகாவில் எம்எல்ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார். தனியாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கான பணம் வெள்ளை பணமா அல்லது டிஜிட்டல் இந்தியாவில் வந்த கருப்புப் பணமா என்பதை மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் தற்போது காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அந்தக் கடமையை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நிச்சயம் செய்யும்” என்றார்.

Intro:கர்நாடகாவில் எம்எல்ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார் தனியாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார் இதற்காக செலவிடப்படும் பணம் வெள்ளை பணமா அல்லது டிஜிட்டல் இந்தியாவில் வந்த கருப்புப் பணமா என்பதை மத்தியில் ஆளும் பிஜேபி மோடி அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாரதிய ஜனதா மோடி அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கலைக்க முயற்சிப்பது ஒரு ஜனநாயகப் படுகொலை - ஜோதிமணி பேட்டி.Body: கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ஜோதிமணி கூறுகையில்:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி கட்சி ஆட்சியை கலைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி அமிர்தாவும் பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சித்து வருகிறார்கள்.

ஏற்கனவே மூன்று முறை இதுபோல ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து தோல்வி அடைந்தது பாரதிய ஜனதா கட்சி.

தமிழகத்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது சிறு குறு நடுத்தரத் தொழில்கள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.01 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்திய எல்லையில் சீனா அரசு ஆக்கிரமிப்பை அதிகரித்துள்ளது இந்தச் சூழ்நிலையில் இந்தியாவையும் இந்திய ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பது ஒன்றே முக்கியமான வேலையாக செய்து வருவது வெட்கப்பட கூடியது மிகவும் கண்டனத்துக்குரியது.

மேலும் கர்நாடகாவில் எம்எல்ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார் தனியாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார் இதற்காக பணம் வெள்ளை படுமா அல்லது டிஜிட்டல் இந்தியாவில் வந்த கருப்புப் பணமா என்பதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மோடி அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாரதிய ஜனதா மோடி அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கலைக்க முயற்சிப்பது ஒரு ஜனநாயகப் படுகொலை இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு பதிலடி அளிப்பார்கள்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் தற்போது காங்கிரஸ் கட்சி இருக்கிறது அந்தக் கடமையை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும்.

இவ்வாறு கரூரில் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.