ETV Bharat / state

உக்ரைன் விவகாரம்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஜோதிமணி எம்பி கடிதம்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் அனுப்பியுள்ளார்.

jothimani mp letter to external affairs minister
ஜோதிமணி எம்பி
author img

By

Published : Feb 25, 2022, 12:07 PM IST

கரூர்: ஜோதிமணி எம்பி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி படித்து வரும் மாணவர்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. தோராயமாக இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்துள்ள பகுதிகளில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக ஊடகங்கள் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், நேற்று முன்தினம் (பிப். 23) வரை பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் திடீரென ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.

jothimani mp letter to external affairs minister
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஜோதிமணி எம்பி கடிதம்

அவர்களை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்யா உக்ரைன் தாக்குதல் - வீடியோ வெளிட்ட உள்துறை அமைச்சகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.