கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே சின்ன காளிபாளையம் என்ற கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த உழவு காளை மாடு ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
இந்நிலையில் மாட்டின் உரிமையாளர் கரூர் தீயணைப்பு நிலைய அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றில் விழுந்த காளை மாட்டினை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் இருவரும் இணைந்து காளை மாட்டை மீட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க...தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமைச் செயலகம்!