ETV Bharat / state

நிலத்தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை...! - Land Problem

கரூர்: நிலத்தகராறு காரணமாக கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தகராறில் கணவன் மனைவி வெட்டிக் கொலை  கரூரில் நிலத்தகராறில் கணவன் மனைவி வெட்டிக் கொலை  நிலத்தகராறு கொலை  கொலை  Land Problem Murder In Karur  Land Problem Murders  Land Problem  Murder
Land Problem Murders
author img

By

Published : May 12, 2020, 4:11 PM IST

கரூர் மாவட்டம் அருகேயுள்ள மணவாடி ஐயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் (35), இவரது மனைவி தீபிகா (33). இவர்களுக்கு நான்கு வயதில் அக்‌ஷயா என்ற மகள் உள்ளார். இவர்கள் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில், ரங்கநாதனும், தீபிகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளியணை காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

இதையடுத்து, இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட ரங்கநாதனின் சித்தி ராணியும் அவரது மூன்று மகன்களான பார்த்திபன், பிரவீன், கௌதம் ஆகியோர் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகேயுள்ள மில்கேட் பகுதியில் உள்ள நிலத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இந்தத் தம்பதியின் மகள் அக்ஷயா வீட்டின் உள்ளே தனியறையில் இருந்ததால் உயிர் தப்பினார்" எனக் கூறினர். மேலும் கரூரில் இரட்டைக் கொலை சம்பவம் மிகுந்த பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'எனது மகளுக்கு நடந்நது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது'- ஜெயஶ்ரீயின் தாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.