ETV Bharat / state

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் - அதிக சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட அதிகளவிலான சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
author img

By

Published : Apr 27, 2019, 9:28 AM IST

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கியது. அரவக்குறிச்சியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில், நேற்று மட்டும் 8 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தல் அலுவலகத்தில் 76க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சுயேச்சை வேட்பாளர்கள் வாங்கி சென்றுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் கடைசி நாளான ஏப்ரல் 29ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகளவில் சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் மட்டும் 42 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிக சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

Body:கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இருபத்தி ஒரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தனர் இதில் நேற்று மட்டும் 8 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்று பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆராய்ச்சி வட்டாட்சியர் அலுவலகம் குவிந்தனர்.

இதுவரை அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் 76 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வாங்கி சென்றுள்ளார்கள்.
டேய் இப்ப மனு தாக்கல் செய்ய நாளை முதல் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் கடைசி நாளான ஏப்ரல் 29-ஆம் தேதி திங்கள்கிழமை அதிக அளவில் கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாம் கட்ட நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சேவையில் ஈடுபட தேர்தல் களத்தில் சுயேச்சை அதிகம் போட்டியிட விரும்புவதாக தெரிவித்தாலும் உண்மையில் பிரதான கட்சிகளில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வாக்குப்பதிவு மையங்களில் முகவர்களை அறிமுகப் படுத்திக் கொள்வதும் வாக்கு எண்ணும் மையங்களில் அதிகம் அவர்கள் பங்கெடுத்து வசதியை ஏற்படுத்தித் தருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது மேலும் இதனால் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் பணிச்சுமை நிதி சுமை ஏற்பட வாய்ப்புள்ளது என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.