ETV Bharat / state

காவலர் போல் பேசி பணம் பறித்த இளைஞர்கள் - அதிரடியாக கைது செய்த கரூர் போலீஸ் - காவலர் போல் நடித்து பணம் மோசடி

சென்னை தாம்பரம் சைபர் கிரைம் காவலர்கள் போல் செல்போனில் பேசி பணம் பறித்த நான்கு இளைஞர்களை கரூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 15, 2022, 6:48 PM IST

கரூர்: தான்தோன்றிமலை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர் (28). கால் டாக்ஸி ஓட்டுநர் இவருக்கு கடந்த வாரம் செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர்கள், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் whatsapp குழுவில் சுரேந்தர் இணைந்ததாகவும் இது தொடர்பாக சென்னை தாம்பரம் சைபர் கிரைம் குற்றப் பிரிவிலிருந்து விசாரணைக்கு புகார் தொடர்பாக அழைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க 5ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பி வைக்க கூறியுள்ளனர். இதனை நம்பிய சுரேந்தர் 5ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், மேலும் கூடுதல் தொகை வேண்டுமென மிரட்டல் விடுத்ததால் சந்தேகமடைந்த சுரேந்தர், ‘ட்ரூ காலர்’ மூலம் அழைப்பு வந்த விவரங்களை ஆராய்ந்து பார்த்துள்ளார்.

அதில் பலரால் புகார் செய்யப்பட்ட ஸ்பாம் எண் (Spam) செய்த எண் என காட்டியுள்ளது. உடனடியாக இது குறித்து சுரேந்தர் கரூர் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் விசாரித்தார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேந்தர், கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட கரூர் மாவட்ட காவல் துறை இது தொடர்பாக அழைப்பில் வந்த செல்போன்கள் மற்றும் google pay எண் வங்கிக் கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்ததில், கோவையைச் சேர்ந்த கௌதம் சித்தார்த் (19), மாதவன் (19), சந்தன சொர்ணகுமார் (19), ஜான் பீட்டர் (19) என நான்கு இளைஞர்கள் கூட்டாக மோசடி செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

இது தொடர்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை கரூர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இளைஞர்களிடம் விசாரணை நடத்தியபோது, கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதனால், காவல் அலுவலகத்தில் உள்ள வாக்கி டாக்கி போன்ற பின்னணி ஓசைகளை யூடிபில் ஒலிபரப்ப செய்து, செல்போனில் காவலர் என கூறி மிரட்டி பலரை நம்ப வைத்துள்ளனர். ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மிரட்டி இதுவரை 5லட்சத்து 35ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளதாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

இதனைத் தொடர்ந்து நான்கு பேரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்த தனிப்படை காவல் துறையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.

இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் காவல் துறையின் இலவச அழைப்பு எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் கரூர் எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சினிமா பாணியில் பைக் திருட்டு.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.