கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் காமராஜ். தற்பொழுது மாவட்ட அம்மா பேரவையில் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்களது பெயரில் பாலம்மாள்புரத்தில் நிலம் உள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏவின் மகன் மணிகண்டன் வங்கியில் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தாததால் அவரது பெயரில் இருந்த இடத்தை வங்கி மூலம் ஏலம் விட்டனர்.
இதை மோகனூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் இன்று தனது ஆட்களுடன் வந்து பாலம்மாள்புரத்தில் ஏலம் எடுத்த இடத்தை கம்பி வேலி போட முயற்சி செய்துள்ளார். இதில் நிலத்தை சரியாக அளவீடு செய்யாமல் அருகில் உள்ள இடத்தையும் சேர்த்து கம்பி வேலி போட்டுள்ளனர். இந்த இடம் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மனைவி செல்வராணி பெயரில் உள்ள இடமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ காமராஜ் நிலத்தை சரியாக அளவீடு செய்யுமாறு கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளானதில் முன்னாள் எம்எல்ஏ காமராஜுக்கு கை மற்றும் கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காமராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காமராஜ் அடிபட்டதையடுத்து அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.