தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் சட்டபேரவை தொகுதியின் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் அமுதா தலைமையிலான குழுவினர், கரூர் கோவை ரோடு, பிரேம் மஹால் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கரூர், தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி அவர் இரண்டு லட்சம் ரூபாய் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றி, கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: அரவக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல்செய்த திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ!