ETV Bharat / state

கரூரில் பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு - போலீஸ் விசாரணை - கரூர் செயின் பறிப்பு

கரூர்: சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

flush jewelry public
flush jewelry public
author img

By

Published : Jan 31, 2020, 7:53 AM IST

கரூர் ராமானுஜம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (82). இவரிடம் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டி அணிந்திருந்த ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். இதனையடுத்து மூதாட்டி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல், அடுத்த அரை மணி நேரத்தில் ஈரோடு கரூர் சாலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எடமலைப்பட்டி புதூர் சித்ரா (54) என்பவரைப் பின்தொடர்ந்து சென்ற நபர்கள், மூன்று பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு

அடுத்தடுத்து இரு பெண்களிடம் செயினை பறித்துக்கொண்டு திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உதவிக் கரம் நீட்டுமா அரசு!

Intro:சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்புBody:கரூர் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு

கரூர் ராமானுஜம் பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் வயது 82 இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டி அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறந்து சென்றனர் கூச்சலிட்ட மூதாட்டி அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் திருடர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதால் மூதாட்டி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தச் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த அரை மணி நேரத்தில் ஈரோடு கரூர் சாலையில் உள்ள கோதூர் பிரிவு எஸ் கே டி திருமண மண்டபத்தில் வளைகாப்புகாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எடமலைப்பட்டி புதூர் சித்ரா வயது 54 கோதூ பிரிவு ரோட்டில் இறங்கி திருமண மண்டபத்துக்கு முகவரி கேட்டுள்ளார் .

அதனைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த ஆசாமிகள் மண்டபத்தின் முன்பே கழுத்தில் இருந்த 3 1/2 பவுன் தங்க செயினை அறுத்து கொண்டு பைக்கில் விரைந்து சென்றனர்.

அக்கம்பக்கத்தில் கூச்சலிடும் திருடர்களை பிடிக்க முடியவில்லை.

கரூர் நகர் பகுதியில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் செயினை பறித்துக்கொண்டு திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகர போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.