கரூர் ரயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய மாவட்ட பூ மார்க்கெட்டில் பூக்களில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது, பரவிவரும் கரோனா தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக பூக்கள் வரத்து அதிகமாக இருந்தும், விலை இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி, மல்லி - 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் - 700 ரூபாய்க்கும், சம்பங்கி - 400 ரூபாயும், கேந்தி - 100 ரூபாயும், அரளி - 200 ரூபாயும் விற்கப்படுகிறது.
அதே சமயம் நாளை(ஆகஸ்டு 22) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வீட்டிலிருந்து கொண்டாட மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ள நிலையில், வீட்டில் வைத்து வழிபடும் விநாயகரை அலங்கரிக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி சென்றனர்.