ETV Bharat / state

உயிர் பலி ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்!

கரூர்: அதிமுகவினரின் வன்முறையால் தொகுதியில் உயிர் பலி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

senthil balaji
senthil balaji
author img

By

Published : Mar 22, 2021, 10:29 PM IST

கரூர் தொகுதிக்குட்பட்ட வெங்கமேடு தண்ணிர் டேங்க் அருகே நேற்றிரவு, திமுக நிர்வாகிகள் கார்த்திக், ரஞ்சித் ஆகிய இருவரும் கம்பி மற்றும் கட்டைகளால் தாக்கப்பட்டு, அதில் கார்த்திக் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, இரண்டு வீடியோக்களை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “கரூர் தொகுதியில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் அடிதடி அராஜகத்தில் இறங்கி வன்முறையை தூண்டி வருகின்றனர். நேற்றிரவு, திமுக நிர்வாகிகள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். அதிமுக வேட்பாளரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த வன்முறை நடந்துள்ளது. அதிமுகவின் வன்முறைகளை அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால் கரூர் தொகுதியில் உயிர் பலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உயிர் பலி ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்!

இதனிடையே, இன்று ராயனூர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர், வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. அதேபோல் திமுகவினர் மீதான தாக்குதல் வீடியோ ஆதாரமும் உள்ளது. இவற்றை மாநில தேர்தல் அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் அளித்து புகார் தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே விற்கப்படும் நிலை உருவாகும் - உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.