ETV Bharat / state

கரூர் அருகே குழந்தைகளுடன் தந்தை தற்கொலை முயற்சி - 2 குழந்தைகள் பலி - கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

2 குழந்தைகள் பலி
2 குழந்தைகள் பலி
author img

By

Published : Oct 11, 2021, 9:46 PM IST

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ஆதனூரைச் சேர்ந்தவர், முருகேசன் (30). இவருக்கு ப்ரியா என்ற மனைவியும் ருதர்ஷனாஸ்ரீ (5), கிருஷ்ணா (3) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்து உள்ளனர்.

இதனிடையே கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அக்டோபர் 9ஆம் தேதி, இரவு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

தற்கொலை முயற்சி

பின்னர் கடவூர் உடையாபட்டி பகுதியில் உள்ள 100 அடி கிணற்றில் குழந்தைகளுடன் அவர் குதித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 குழந்தைகள் பலி

இச்சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். முருகேசன் கிணற்றினுள் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். தொடர்ந்து குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூராய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் முருகேசனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி குளித்தலை கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை: கடை உரிமையாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.