தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர்மின் கோபுரங்கள் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், சந்தை மதிப்பில் இழப்பீடு, 100 விழுக்காடு ஆதாரத் தொகை, மாத வாடகை, விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ மீட்டர் உயர்மின் கோபுரம் திட்டப்பணிகளை, வழக்குகள் முடிவடையும் வரை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் கூறப்பட்டிருந்தன. இம்மனுவினை நேற்று (மே. 16) விவசாயிகள், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சந்தித்து அளித்தனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர் பதவியில் ஐஏஎஸ் அலுவலரை நியமிப்பதா? - அரசு அலுவலர் சங்கங்கள் கொந்தளிப்பு