ETV Bharat / state

விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் - சாலை மறியல்

கரூரை அடுத்த காந்திகிராமத்தில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

youth death  Road block  accident news  karur accident news  youth death by accident  family Road block for demanding compensation  family Road block for youth death by accident in karur  karur news  கரூர் செய்திகள்  சாலை விபத்து  கரூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்  சாலை மறியல்  இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல்  உயிரிழந்த இளைஞர் இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல்  விபத்து செய்திகள்  விபத்தால் ஊயிரிழப்பு
சாலை மறியல்
author img

By

Published : Jul 29, 2021, 12:48 PM IST

கரூர்: கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட கோரகுத்தி பகுதியை சேர்ந்த இளைஞர் கார்த்தி (19), தனது சகோதரியை அழைத்து வருவதற்காக, கோரகுத்தியிலிருந்து மணவாசி நோக்கி சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கார்த்தியை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூலை 27 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.

உறவினர்கள் சாலை மறியல்

இதனை கண்டித்து அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காந்திகிராமம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இகாவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும், மணவாசி சுங்கச் சாவடியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்காத நிலையில், தொடர் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சோழவரம் அருகே ரவுடி கொலை - இருவர் சரண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.