ETV Bharat / state

Exclusive: ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க உடையநாதர் கோயிலை சீரமைக்க கோரிக்கை.. கண்டுகொள்ளுமா இந்து சமய அறநிலையத்துறை? - Exclusive

மேட்டு மருதூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உடையநாதர் கோயிலைச் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exclusive: ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய உடையநாதர் கோவிலை சீரமைக்க கோரிக்கை.. கண்டுக்கொள்ளுமா இந்து சமய அறநிலையத் துறை?

author img

By

Published : May 17, 2022, 5:03 PM IST

Updated : May 17, 2022, 10:05 PM IST

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குள்பட்ட மேட்டு மருதூரில் கி.பி.996இல் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீ உடையநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் கோபுரமானது பத்து அடி உயரத்திற்கு கருங்கற்களாலும், அதன்மேல் உள்ள 20 அடி உயரத்திற்கு செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது.

இக்கோவிலினுள் ஆறரை அடி உயரமுள்ள சிவலிங்கமும் உள்ளது. இந்த கோவிலின் வரலாற்றைக் குறிக்கும் வகையில் கல்வெட்டுகள், பழைமை வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. இதில் சிவலிங்கம் மட்டுமல்லாது பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர், விநாயகர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும் உள்ளன.
அதேநேரம், சோழர் காலத்தில் சிவபெருமானுக்கு ஆறு கால பூஜைகள் நடந்ததாகவும், அதற்காக தீர்த்தம் எடுக்க மருதூர் காவிரிக்கரையில் இருந்து பட்டின பிள்ளையார் கோவிலுக்கு சுரங்கப்பாதை வழியாக கோவில் அர்ச்சகர்கள் சென்று வந்ததாகவும் இங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exclusive: ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய உடையநாதர் கோவிலை சீரமைக்க கோரிக்கை.. கண்டுக்கொள்ளுமா இந்து சமய அறநிலையத் துறை?

மருதூர் பெயர் காரணம்: மேலும், இங்குள்ள சிவபெருமானுக்கு ஆராமுதீஸ்வரர் என்று பெயர். சோழர் காலத்தில் இந்தப் பகுதியில் வேளாளர், பிராமண சமூகத்தினர் உள்ளிட்டோர் வாழ்ந்து வந்துள்ளனர். ராஜராஜசோழன் தனது 11 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தின்போது, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து, கோயிலை நிர்மாணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தப் பகுதி பிரம்ம தேயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு இந்தப் பகுதி தானமாக வழங்கப்பட்டதால், ‘மாதான மருதூர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், காலப் போக்கில் இது மருதூர் என மருவி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் எண்பட்டை வடிவம் கொண்டது. ஆவுடையார் எனக் கூறப்படும் சிவலிங்கத்தின் அடிப் பகுதி, தாமரை இதழ் விரிந்தது போன்ற அமைப்பைக் கொண்டது.

இதற்கு சோழர் காலத்தில் இந்த வகை அமைப்புடைய லிங்கங்களே அதிகம் இருந்ததாக தொல்லியல் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்தக் கோயில் இன்றுவரை பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. மேலும் இந்த கோவிலுக்குச் சொந்தமாக நிலங்களும் இருந்துள்ளன. ஆனால், இந்த நிலங்களின் தற்போதைய நிலை என்னவென்பதே தெரியவில்லை.

முதல் நடவடிக்கை: இந்தக் கோயிலைப் பராமரிக்க ஆள்கள் இல்லாததால், இப்பகுதி மக்களே முன்வந்து அர்ச்சகரை நியமித்து, முக்கிய சிறப்பு தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள கல்வெட்டுகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், இந்தக் கோயிலை கடந்த 2007ஆம் ஆண்டு பார்வையிட்ட அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் தி.ந. வெங்கடேஷ் 2007-2008 ஆம் ஆண்டிற்கான 2ஆவது பகுதித் திட்டத்தில் இந்தக் கோயிலைச் சேர்த்து, நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், மேட்டு மருதூர் புராதன நகரமாக இருந்தால், அதுகுறித்த ஆவணங்களைத் தயாரித்து கரூர் மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலருக்கு அனுப்புமாறு மருதூர் பேரூராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் அனுப்பப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகம் மூலம் கோயிலைச் சீரமைப்பது குறித்த கருத்துரு, சென்னை நகர் ஊரமைப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மக்கள் கோரிக்கை: இதையடுத்து, மருதூர் கோயிலைச் சீரமைக்க ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக வந்த தகவலால், மருதூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நேரத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ல் நகர் ஊரமைப்புத் துறை அலுவலகத்திலிருந்து கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “கடலூர் மாவட்டம், மருதூர் ஊராட்சி வள்ளலார் பிறந்த ஊர். எனவே, அந்த மருதூர் ஊராட்சிக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது” என்ற தகவல் மக்களுக்குத் தெரிய வந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள், இந்து சமய அறநிலையத்துறை தங்கள் ஊரில் உள்ள இந்தக்கோவிலை செப்பனிட்டு கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாதது மிகவும் வேதனைக்குரியது - அமைச்சர் துரைமுருகன்

Last Updated : May 17, 2022, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.