ETV Bharat / state

முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட புறப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் கைது! - சமூக ஆர்வலர் முகிலன் கைது

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், முதலமைச்சருக்கு கருப்பு கொடி காண்பிக்க இருந்த முகிலனை காவல் துறையினர் கைது செய்தனர்.

முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட புறப்பட்ட முகிலன் கைது!

author img

By

Published : Feb 25, 2023, 8:49 AM IST

கரூர்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், நேற்று (பிப்.24) கரூரில் வைத்து ஈடிவி பாரத் செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “கரூரில் சட்ட விரோத கல்குவாரிக்கு எதிராக போராடி வந்த விவசாயி ஜெகநாதன் படுகொலை செய்யபட்ட சம்பவத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்புக்கு தரக் கோரியும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை அருகே உள்ள முகிலனின் வீட்டில், இன்று (பிப்.25) காலை 7 மணியளவில் அவரை ஈரோடு காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முகிலன், வாங்கல் கிராமத்தில் பாயும் காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் சட்ட நடைமுறை பின்பற்றப்படுவதை ஆய்வு செய்ய பிப்ரவரி 26ஆம் தேதி காலை 10 மணிக்கு மணல் குவாரிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.

மேலும் இது குறித்து ஈடிவி பாரத்துக்கு முகிலன் அளித்த பிரத்யேக பேட்டியில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் தாக்கப்பட்டதையும், அதற்கு காவல் துறையினர் தரப்பில் முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை" என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் தான் முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட இருந்த முகிலனை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.