கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், சாந்தப்பாடி கிராமம் அருகே அருந்ததியர் மயானம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை நிறுத்தி மயான நிலத்தை மீட்டுத் தரக்கோரி அரவக்குறிச்சி வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலித் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் கருப்பையா, "பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆக்கிரமித்து காற்றாலை மின் உற்பத்தி தயாரிக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசால் 2007ஆம் வழங்கப்பட்ட நிலத்தை அத்துமீறி காற்றாலை கம்பம் அமைக்கும் பணியினை மேற்கொண்டுவரும் தனியார் அமைப்பு மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: 'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி