கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, கடவூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, அரவக்குறிச்சி, பரமத்தி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இதுவரை வேட்புமனு தாக்கலில் 181 பேர் பஞ்சாயத்து தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இன்று மின்சார சேவை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக முன்னதாகவே அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னதாகவே டீசல் ஜெனரேட்டர் வைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது மின்சாரம் சேவை இல்லை என்பதால் ஜெனரேட்டர் வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தாததால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனையும் படிங்க:
'2 ஆண்டுக்கு ஒருமுறை வாகன புதுப்பித்தல் முறை' - அமைச்சர் தகவல்