தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல், கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புப் பணியில் 914 காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியான திருமலை அருகே உள்ளாட்சித் தேர்தல் பணியில் இருந்த தலைமைக் காவலர் ஜான்சன் என்பவர் பணியில் இருக்கும் பொழுது மாரடைப்பு வந்ததால் உயிரிழந்தார்.
இவர் ஈரோடு மாவட்டம் நொச்சிக் காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவருக்கு இரு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. காவல் பணியில் ஈடுபட்ட காவலரின் உயிரிழப்பால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்ததால், அவரது குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்