ETV Bharat / state

'அரவக்குறிச்சிக்கு எதுவும் செய்யாதவர் செந்தில்பாலாஜி' - எடப்பாடி குற்றச்சாட்டு

கரூர்: "செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அரவக்குறிச்சி தொகுதிக்கு எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை" என்று, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

File pic
author img

By

Published : May 14, 2019, 9:54 AM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், "செந்தில்பாலாஜி முதலில் மதிமுகவில் இருந்து பின்னர் திமுகவிற்கு மாறி கவுன்சிலராக இருந்தார். பின்பு ஜெயலலிதா மூலம் அதிமுகவில் இணைந்து எம்எல்ஏ, அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்கு இதுவரை எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை.

முதலமைச்சர் பழனிச்சாமி பரப்புரை

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலங்களில் ஸ்டாலினை சட்டசபையில் விமர்சித்தார். ஆனால், இப்போது திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கிறார். இப்படி பின்புலம் கொண்ட செந்தில்பாலாஜியை புகழ்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்வது வேடிக்கையாக உள்ளது" என்று விமர்சித்தார்.

Intro:செந்தில் பாலாஜி மந்திரியாக இருந்த காலத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை - முதல்வர்

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை ஆற்றினார் அவருடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேட்பாளர் உடன் இருந்தார்.

அப்போது திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-

செந்தில் பாலாஜி முதலில் மதிமுகவில் இருந்து பின்பு திமுக கவுன்சிலர் இருந்த பின்பு ஜெயலலிதா மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் எம்எல்ஏ மற்றும் மந்திரி பொறுப்பு வகித்தார் இருந்தபோதிலும் அரவக்குறிச்சி தொகுதிக்கு இதுவரை எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அதன் பின்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அங்கேயும் துரோகம் செய்துவிட்டு தற்போது திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக இருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜி தற்பொழுது புகழ்ந்து வருகிறார் ஆனால் செந்தில் பாலாஜி மந்திரியாக இருந்த காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை சட்டசபையில் விமர்சித்தார் பின்பு சட்டசபையில் இருந்து வெளியேறி செய்தியாளரிடம் பேசிய ஸ்டாலின் செந்தில் பாலாஜி ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார் என்று செய்தியாளரிடம் கூறினார் ஆனால் தற்போது ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின் என்றார் முதல்வர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.