ETV Bharat / state

ஏறுமுகத்தில் முருங்கைக்காய் விலை! விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர்: அரவக்குறிச்சியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காயின் விலை ரூ.2 லிருந்து தற்போது ரூ.20-க்கு விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

DRUMSTICK
author img

By

Published : May 2, 2019, 4:03 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது தேர்தல் மட்டுமல்ல... முருங்கைக்காய்தான். இந்த முருங்கைக்காய்கள் தமிழ்நாடு அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் பெயர்பெற்றது. அப்படிப்பட்ட முருங்கைக்காய்கள் கடந்த சில மாதங்களாகவே, கிலோ ரூ. 7 லிருந்து அப்படியே குறைந்து ரூ.2-க்கு வந்துவிட்டது. இதற்கு அதிக வரத்துதான் காரணம் என இருந்த நிலையில், தற்போது முருங்கைக்காய் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.20 முதல் 25 வரை ஏலம் போகிறது.

ஏறுமுகம் காணும் முருங்கைக்காயின் விலை

மேலும், சாக்குப் பைகளிலும், அட்டைகளிலும், கொள்முதல் செய்யப்படும் முருங்கைக்காய்கள், பெங்களூரு, ஹைதராபாத், குருவாயூர், மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பல மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கை ஒரு கிலோ ரூ.2 தானே என்ற விரக்தியில் இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோ 20 லிருந்து 25 வரை விற்பனை செய்வது மிக்க மகிழ்ச்சி ஒருபுறம் ஏற்படுத்தினாலும், அந்த அளவிற்கு வியாபாரம் செய்ய முருங்கைக்காய்கள் இல்லையே என்று அவர்களை கவலை அடையச் செய்துள்ளது.

Intro:ஏறுமுகம் காணும் முருங்கையின் விலை கிலோ இரண்டு ரூபாயில் இருந்து ரூபாய் இருபதற்கு வந்த முருங்கைக்காய் - மகிழ்ச்சியில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள்.

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்றாலே முருங்கைக்காய் தான். தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தெரிய வரும் அப்படிப்பட்ட முருங்கைக்காய்கள் கடந்த சில தினங்களாகும் சில மாதங்களாகும் முருங்கைக்காய் கிலோ 7 ரூபாயிலிருந்து அப்படியே குறைந்து ரூபாய் 2 வந்து விட்டது.

இந்நிலையில் வரத்து அதிகம் தான் காரணம் என்று இருக்க, தற்போது வரத்து அதாவது சீசன் குறைந்து வரத்து குறைவாக காணப்படும் நிலையில், தற்போது ஒரு கிலோ முருங்கை ரூபாய் 20 லிருந்து 25 வரை ஏலம் போகிறது மேலும், இங்கு சாக்கு பைகளிலும், அட்டைகளிலும், கொள்முதல் செய்யப்படும் முருங்கைக்காய்கள் ஆனது. பெங்களூர், ஹைதராபாத், ஆந்திரா, குருவாயூர், மும்பை மற்றும் நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது ஏற்கனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கை ஒரு கிலோ ரூபாய் 2 தானே என்ற விரக்தியில் இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோ 20 லிருந்து 25 வரை விற்பனை செய்வது மிக்க மகிழ்ச்சி ஒருபுறம் ஏற்படுத்தினாலும், அந்த அளவிற்கு வியாபாரம் செய்ய முருங்கைக்காய்கள் இல்லையே ! என்று ஒருபுறம் கவலையும் அடையச் செய்துள்ளது. இருப்பினும் விலை குறைந்தாலும் சரி, விலை ஏற்றம் அடைந்தாலும் சரி, எங்களது கொள்முதலில் எந்தவித தடையும் இல்லாமல் உள்நாட்டு ஏற்றுமதி செய்து வருகின்றனர் அப்பகுதியில் இயங்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள்.

பேட்டி:-

துரைசாமி - அரவக்குறிச்சி பகுதி விவசாயி

காமாட்சி - அரவக்குறிச்சி பெண் விவசாயி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.