ETV Bharat / state

கரூருக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் வர ஏற்பாடு - ஆட்சியர்

கரூர்: மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள், செவிலியர் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரூருக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் வர ஏற்பாடு -மாவட்ட ஆட்சியர் அன்பழகன்!

author img

By

Published : Apr 11, 2020, 11:54 PM IST

கரூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 316 பேருக்கு தேவையான அத்தியவசிய பொருள்களை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “கரூரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபட்டு வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 67 பேருக்கு 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுடன் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

கரூருக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் அழைத்து வர ஏற்பாடு

மேலும், “ஏழு பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. மொத்தமாக இந்த 30 நபர்களும் அவர்களைச் சார்ந்த 91 பேரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த 91 நபர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என 235 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மருத்துவக் கல்லூரிக்கு வெளி மாவட்டத்திலிருந்து தொற்று உள்ள நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதால் திண்டுக்கல் மற்றும் நாமக்கல்லில் இருந்து கூடுதலாக மருத்துவர் மற்றும் செவிலியர் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க... உணவின்றி தவித்த நாடோடிகள்... உதவிக்கரம் நீட்டிய நெல்லை நிர்வாகத்துக்கு ஈடிவி பாரத் நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.