கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி, தன்னிடம் அவதூறாகப் பேசி மிரட்டியதாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அளித்த புகாரின் பேரில், செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்ற செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஒன்பதாம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டார். அப்போது இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜாரானார். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தனி அறையில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் பிணை