கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நேற்று (பிப். 17) நடைபெற்றது. கரூர் வெங்கமேடு பகுதியிலுள்ள ஸ்ரீ அக்னிஸ் கல்விக் குழுமத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
இதில், 25க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, முதல் பரிசாக 15ஆயிரம் ரூபாய் மற்றும் 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுழற்கோப்பையையும், இரண்டாம் பரிசாக 10ஆயிரம் ரூபாய் மற்றும் 7ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுழற்கோப்பையையும், மூன்றாவது மற்றும் நான்கவது பரிசுகள் முறையே 7ஆயிரம் ரூபாய் மட்டும் 5ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுழல் கோப்பையையும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: கிராம சபைக்கு அதிகாரம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டம்