ETV Bharat / state

வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் கலெக்டர்! - மருத்துவமுகாமில் பங்கெடுத்த மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஊராட்சிப் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Jun 19, 2021, 7:39 AM IST

கரூர்: மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிரபு சங்கர் தினந்தோறும் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

மருத்துவமுகாமில் பங்கெடுத்த மாவட்ட ஆட்சியர்

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கருப்பத்தூர் ஊராட்சி, வேங்காம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
வீடு வீடாக சென்ற ஆட்சியர்
தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
மாவட்டத்தில் தொற்றை விரைவில் கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பார்வையில் உள்ள கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டார்.

மக்களைப் பாராட்டிய ஆட்சியர்
பொதுமக்களும் அவர்களின் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க, அவர்களைப் பாராட்டியதுடன், விழிப்போடு இருந்து கரோனா தொற்றை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சந்தோஷ்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயசங்கர், வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில்: ஆனி ஊஞ்சல் உற்சவம் 4ஆம் நாள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.