கரூர் தான்தோன்றி மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் சதாசிவம். தற்பொழுது பரவிவரும் கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சொந்த செலவில் கரூர் தான்தோன்றி மலைப்பகுதி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் இருக்கும் சாலையின் நடுவில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார்.
இந்த ஓவியங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளதுது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அரக்க வடிவம் கொண்ட கரோனா வைரஸ் ராட்சச ஓவியத்தை சுமார் 5 மணி நேரமாக வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதுகுறித்து ஓவியர் சதாசிவம் கூறுகையில், “தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், தனது சொந்த மாவட்டமான கரூரில் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தோன்றியது. அதனால் தனது சொந்த செலவில் ஓவியம் வரைந்து, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்த செய்யலாம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க...தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு