ETV Bharat / state

குழந்தை திருமணங்கள் தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு கரூர் மாவட்டத்தில் இனி திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு விஏஓ சான்று அவசியம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

t
t
author img

By

Published : May 15, 2022, 3:39 PM IST

கரூர்: குழந்தைத் திருமணம் தொடர்பாக 'நிமிர்ந்து நில் துணிந்து செல்' இயக்கம் தொடங்கப்பட்டு சைல்டு லைன் தொலைபேசி எண் 1098 என்ற எண் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் 18 வயதுக்கும் குறைவாக நடைபெறும் திருமணங்களால் பிரசவ காலத்தில் உயிரிழப்புகள், சிசு மரணங்கள் ஏற்படுவதை கண்காணிக்கும் பொருட்டு குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு ஊராட்சி அளவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கடந்த மே 12ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி, சமூக பாதுகாப்புத் துறை மண்டல நன்னடத்தை அலுவலர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சியினை தொடங்கிவைத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசுகையில், “கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு வரை 52 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இதில் சுமார் 3ஆயிரம் பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ளனர். இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம் இளம்வயதில் மேற்கொள்ளப்படும் குழந்தை திருமணங்கள் தான் என்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் இளம் வயது திருமணங்களை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான புகார்கள் வராத காரணத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இனி வருகின்ற புகார்கள் மீது காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

குழந்தைத் திருமணம் செய்து வைப்பவர்கள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுக்க கூடிய சட்ட உரிமை தற்போது வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் அடுத்ததலைமுறைக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இனி கிராமங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து உள்ளனர் என்பதற்கான சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற்ற பின்னரே திருமண மண்டபங்களில் முன்பதிவு மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக திருமண மண்டபங்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சமூகப் பொறுப்புடன் உணர்ந்து தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பிரியாணிக்கு மட்டும் ரூ.3 லட்சம் பில் - அரசு மருத்துவமனையில் மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.