ETV Bharat / state

கரூரில் சேவல் சண்டை போட்டிகள் தொடக்கம்! - பாரம்பரியமிக்க சேவல் சண்டை போட்டி

கரூர்: பாரம்பரியமிக்க சேவல் சண்டை போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடங்கியது.

சேவல் சண்டை
சேவல் சண்டை
author img

By

Published : Jan 14, 2021, 4:55 AM IST

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் கரூரில் நடைபெறும் சேவல் சண்டையில் பங்கேற்பது வழக்கம். தற்போது கரோனோ காலம் என்பதால் சேவல் சண்டை போட்டி நடக்குமா? என சேவல் சண்டை பிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அனுமதியோடு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் சேவல் சண்டை போட்டி இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற போட்டியில் மட்டும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்களுடன் போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் சேவலுக்கு தோல்வி அடைந்தவர்களின் சேவலை கொடுத்துவிட வேண்டும் என்பதே சேவல் போட்டியின் விதியாக கொண்டு இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

கரூர்

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் முக கவசம் போட்டிக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.