தமிழ்நாடு அரசின் 110 விதியின் கீழ் நேற்று (பிப். 25) சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59லிருந்து 60ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
ஐடியூ தொழில்சங்க அமைப்பின் கரூர் மாவட்ட தலைவருமான ஜீவானந்தம் பேட்டி இந்த அறிவிப்புக்கு சிஐடியூ தொழிற்சங்க அமைப்பின் மூத்தத் தலைவரும் கரூர் மாவட்ட தலைவருமான ஜீவானந்தம் கரூரில் செய்தியாளரிடம் பேசுகையில், ”தமிழ்நாடு அரசில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழ்நாடு அரசு ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தியுள்ளதன் உள்நோக்கம் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பலன்களை தள்ளிப் போடுவதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்மூலம் படித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு மன சுமையைத்தான் அதிகப்படுத்தும். ஏற்கனவே உள்ள அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, தடியடி நடத்தி அவர்களை தாக்கிய இந்த அரசு தற்போது யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.