ETV Bharat / state

தேவாலயத்தில் பாலியல் புகார் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு

author img

By

Published : Dec 9, 2019, 10:21 PM IST

கரூர்: தேவாலயத்தில் பாலியல் புகார்கள் தொடர்வதாகவும், தேவாலயத்திற்குச் சென்ற மூன்று பேர் எங்கு என்று கேட்டால் இறந்து விட்டதாகக் கூறும் பாதிரியார் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாதிரியார் மீது நடவடிக்கை
பாதிரியார் மீது நடவடிக்கை

கரூரை அடுத்த ஆண்டாங்கோயில் அஞ்சல், ரெட்டிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (வயது 68). இவரது சித்தி நாச்சம்மாள், சித்தியின் மகள் பாப்பாயி மற்றும் அவரது மகன் நல்லச்சாமி ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக சின்ன ஆண்டாங்கோயில் முதல் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள லீபனோன் ஆஃப் கார்டு கிறிஸ்துவ சபைக்குச் சென்று வந்துள்ளனர்.

பின்னர் அந்த தேவாலயத்துக்குத் தேவையான பணிகள் செய்து வந்துள்ளனர். நாச்சம்மாளுக்கு வயதானதால், சுயநினைவு இல்லாமலும் அவரது மகள் லேசாக மனக் குறையுடன் காணப்பட்ட நிலையில், மகனுக்கும் கண் பார்வை குறைவாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை என்று கருதி, அவரது உறவினர் கந்தசாமி என்பவர் அந்த தேவாலயத்தில் சென்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு மற்றும் அவரது மகன் உதவி பாதிரியாரான சாம்மங்கள்ராஜ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். ஆகையால், மனமுடைந்த கந்தசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் கார்வேந்தன் தலைமையில் இன்று கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலரிடம் மனு ஒன்றினை கொடுத்தார்.

அதில், ' அந்த சர்ச்சில் ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அதை வீடியோவாக்கி, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிரியார் மீது புகார்

அதனையொட்டி கரூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து பிணையில் இருக்கும் நபர்களான பாதிரியார் மற்றும் அவரது மகன் உதவி பாதிரியார் ஆகியோரிடம் தற்போது நாச்சம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினைப் பற்றி கேட்டோம். அப்போது அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட முடியாத முறையில் இறந்து விட்டதாகவும், நாச்சம்மாள் ரத்தம் சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் எப்படி இறந்தார்கள் என்று கூறவில்லை. இறப்பு குறித்து கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.'

மேலும், 'சர்ச்சிற்கு புதிய பாதிரியார் வந்தும் அந்தப் பாதிரியாரையும் பணி செய்ய விடாமல் தடுத்து வரும் மோசஸ் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்குமாறும்' அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

'விண்வெளியில் தொடங்கியாச்சு ஹோட்டல்' - குடியேறப் போறது யாருனு தெரியுமா?

Intro:கரூர் சர்ச்சில் தொடரும் பாலியல் புகார்கள், சொத்து அபகரிப்புகளை தொடர்ந்து சர்ச்சிற்கு சென்றவர்கள் மூன்று பேர் எங்கு என்று கேட்டால் இறந்து விட்டதாக கூறும் பாதிரியார் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனுBody:கரூர் சர்ச்சில் தொடரும் பாலியல் புகார்கள், சொத்து அபகரிப்புகளை தொடர்ந்து சர்ச்சிற்கு சென்றவர்கள் மூன்று பேர் எங்கு என்று கேட்டால் இறந்து விட்டதாக கூறும் பாதிரியார் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு – பெண்களுக்காக பிரச்சினையை கையில் எடுத்தது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
கரூர் அடுத்த ஆண்டாங்கோயில் அஞ்சல், ரெட்டிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (வயது 68)., இவரது சித்தி நாச்சம்மாள், சித்தியின் மகள் பாப்பாயி மற்றும் அவரது மகன் நல்லச்சாமி ஆகியோர் கடந்த 5 வருடங்களாக சின்ன ஆண்டாங்கோயில் முதல் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள லீபனோன் ஆப் கார்டு கிறிஸ்த்துவ சபைக்கு சென்று வந்துள்ளனர். பின்னர் அந்த சர்ச்சே கதியென்று அந்த குடும்பத்தினர் இருந்துள்ளதாகவும், அந்த நாச்சம்மாளுக்கு வயதானதால், சுயநினைவு இல்லாமலும், அவரது மகளுக்கு லேசாக மனம் குறையுடன் காணப்பட்ட நிலையில், மகனுக்கும் கண் பார்வை குறைவாக இருந்துள்ளதையடுத்து கடந்த சில மாதங்களாகவே அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை என்று கருதி அவரது உறவினர் கந்தசாமி என்பவர் அந்த சர்ச்சில் சென்று கேட்டதற்கு அவர்கள் மூன்று பேரும் இறந்து விட்டதாகவும், குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், எந்த தகவலும் கொடுக்காமல், அந்த கிறிஸ்த்துவ பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு மற்றும் அவரது மகன் உதவி பாதிரியாரான சாம்மங்கள்ராஜ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். ஆகையால் மனமுடைந்த கந்தசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் கார்வேந்தன் தலைமையில் இன்று கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலரிடம் மனு ஒன்றினை கொடுத்து, அந்த சர்ச் ஏற்கனவே கடந்த பலமாதங்களாகவே, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறத்தியதோடு, அதையே வீடியோவாக்கி, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அதனையொட்டி கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிந்து ஜாமினில் இருக்கும் நபர்களான பாதிரியார் மற்றும் அவரது மகன் உதவி பாதிரியார் ஆகியோரிடம் தற்போது நாச்சம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினை பற்றி கேட்கும் போது., அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், நாச்சம்மாள் ரத்தம் சம்பந்தப்பட்டவர்களிடம் யாரிடமும் தெரிவிக்காமல்., எப்படி எரித்தீர்களா ? அல்லது புதைத்தீர்களா ? என்றும், எப்படி இறந்தார்கள் என்று கேட்டதற்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி, மேற்படி சர்ச்சிற்கு புதிய பாதிரியார் வந்தும் அந்த பாதிரியாரையும் பணி செய்ய விடாமல் தடுத்து வரும் அந்த சர்ச்சின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், தமிழக அளவில் பொள்ளாச்சி பாலியம் சம்பவத்தினையே மிஞ்சும் வகையில் தற்போது பாதிரியார் தந்தையான மோசஸ் துரைக்கண்ணு மகனும், உதவி பாதிரியாருமான சாம்பங்கள்ராஜ் ஆகியோர் பெண்களை வசப்படுத்தியும், ஆபாச வீடியோக்கள் எடுத்தும் பலரை மிரட்டியது தற்போது மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : கார்வேந்தன் – நிறுவனத்தலைவர் – தமிழ்நாடு இளைஞர் பேரவை

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.