தேனி : தேனி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நேற்று(செப் 8) மாலை 6 மணி அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெரியகுளம் சாலையில் ஊர்வலமாக சென்ற போது டிராக்டரில் சென்ற பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது தேனி டிஎஸ்பி பார்த்திபன் தடியடி நடத்தியதாக கூறி, இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து ஊர்வலம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று காலை (செப் 9) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் கட்டுடன் வந்தனர். அங்கு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் அனைவரும் சேர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வலியுறுத்தி, புகார் மனு அளித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : பாடலால் நடந்த கொலை.. தம்பி இறந்தது தெரியாமல் நடந்த அண்ணன் திருமணம்.. கோவையில் கொடூர சம்பவம்! - coimbatore youth murder