ETV Bharat / health

சப்பாத்தியில் உள்ள கருகிய பகுதி உங்கள் ஃபேவரைட்டா? புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாம்..எச்சரிக்கை மக்களே! - CAN BURNT PHULKA CAUSE CANCER

DO BURNT PHULKA CAUSES CANCER?: கேஸ் அடுப்பில் நாம் நேரடியாக சுட்டுச் சாப்பிடும் ரொட்டி அல்லது புல்காவை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று கூறுவது உண்மை தானா? இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? தெரிந்து கொள்வோம் இந்த செய்தி தொகுப்பில்..

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 9, 2024, 5:56 PM IST

ஹைதராபாத்: வட இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்த ரொட்டி/புல்கா மற்றும் சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகள் தற்போது தென் இந்தியா மக்களின் உணவிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கோதுமை வகைகளை சாப்பிட பரிந்துரைக்கப்பட்டது தான்.

இதன் காரணமாக, அனைவரது வீடுகளிலும் காலை அல்லது இரவு உணவாக சப்பாத்தி வகைகள் புகுந்து விட்டன. எண்ணெய் உணவுகளை குறைப்பதற்காக சப்பாத்தியை நேரடியாக தீயில் சுட்டு ரொட்டி/புல்காவாக செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால், ரொட்டியை நேரடியான தீயில் சமைப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்கள் உருவாகலாம் என்ற கருத்துகளும் பரவி வருகிறது.

2018 ஆம் ஆண்டு ஃபுட் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ரொட்டி அல்லது எந்த உணவையும் நேரடியாக தீயில் சமைப்பதால் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலையில் உணவு சமைக்கப்படும் போது, ​​அக்ரிலாமைடு, ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCA) மற்றும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) போன்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்கள் உருவாகின்றன.

அதேபோல, இறைச்சியை நேரடியாக கிரில்லில் சமைப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது உண்மையா தானா? என்பது குறித்து டாக்டர் பபிதா பன்சாலை,

"ரொட்டியை நேரடியான சுடரில் சமைப்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், அவ்வாறு செய்வது அபாயகரமான இரசாயனங்கள் உருவாகலாம் என்று சில சான்றுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அக்ரிலாமைடு, PAHகள் மற்றும் HCAகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது" என்றார்

நேரடி தீயில் ரொட்டியை சமைப்பதால் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயங்களைக் குறைப்பதற்கான உதவிகுறிப்புகள்:

கருகிய பகுதியை அகற்றி விடுங்கள்
கருகிய பகுதியை அகற்றி விடுங்கள் (GETTY IMAGES)

கருக விடாதீர்கள்: நேரடியாக தீயில் சுடும்போது, புல்கா எரியாமல் அல்லது அதிகமாக கருகாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். கருகிப்போகாமல் இருப்பதற்கு, அடிக்கடி புல்காவை புரட்டி விடவும். அதையும் மீறி கருகிவிட்டால், உண்பதற்கு முன்பாக எரிந்த பகுதியை அகற்றி விடவும்.

குறைவாக சாப்பிடுங்கள்: புல்காவை நேரடியான சூட்டில் சுட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நீங்கள் விரும்பினால் அளவோடு சாப்பிடுங்கள் என்கிறார் மருத்துவர்.

Pan-ஐ யூஸ் செய்யவும்: புல்காவை நேரடியான தீயில் சமைப்பதை விட,அவற்றை ஒரு தவாவில் வைத்து சமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதிக வெப்பநிலையை உறிஞ்சுவதை தடுத்து குறைந்த வெப்பத்தில் தயாராகிறது. இது PAH மறும் அக்ரிலாமைடு உற்பத்தியை தடுக்கிறது.

பழங்களை உட்கொள்ளுங்கள்: நீங்கள் நிறைய ரொட்டி சாப்பிட்டால், உங்கள் உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும். இது ஃப்ரீ ரேடிக்கல்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் புற்றுநோயை அபாயத்தை தடுக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க: இந்த 5 அறிகுறிகள் இருந்தால்..புற்றுநோய்க்கான அபாயம் என அர்த்தம்!

சுகர் பேசண்ட்ஸ் லைட்டா மது அருந்தலாமா? எந்த அளவோடு நிறுத்த வேண்டும்? டாக்டர் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.