திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அமலாபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (37). இவரது மனைவி மீனா (30). இவர்களுக்கு கனிஷ்கா (4) என்ற மகளும், தருண் என்ற மகனும் (2) உள்ளனர். இந்நிலையில், சீனிவாசன் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக மேலவெளியூரில் உள்ள வளைவில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கரூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார், குடும்பத்தினர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், நால்வரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். சீனிவாசன், மீனா ஆகியோர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், பாதி வழியிலேயே சீனிவாசனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தோகமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடிவருகின்றனர். மீனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவர் உயிரிழப்பு!