தமிழ்நாடு அரசு சார்பாக ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில் அறிவிக்கும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 9 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கௌரவித்தார். அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''கரூர் மண்டலத்தில் 60 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளில் கட்டணம் ஏதும் மாற்றப்படவில்லை.
கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்பட்டுவருகின்றன. பேருந்தில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு ரூபாய் 5 வசூல்செய்யப்பட்டு முகக்கவசம் அளிக்கப்படுகிறது'' என்றார்.
இதையும் படிங்க: புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர்!