கரூர்: கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே கடந்த 8ஆம் தேதி, சுபாஷ்(16) என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் கட்டளை பகுதியில் உள்ள காவிரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சுபாஷ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தபோது, அவரது காலணிகள் மட்டும் இருந்துள்ளது.
இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, காவிரி ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கினர். இரவு வரை தேடியும் உடல் கிடைக்கவில்லை.
நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மாலையில் சுபாஷின் உடலை மீட்டனர். பின்னர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூறு ஆய்வு முடிந்து இன்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் - புதிதாக 219 பேர் பாதிப்பு... மக்களே உஷார்...