முன்னதாக கோடங்கிபட்டி, ராயனூர், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் கார்னர், கரூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்த அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு தாக்கல்செய்தார்.
இந்நிகழ்ச்சியின்போது அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, அதிமுக கரூர் வடக்கு நகரச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வேட்புமனுவினைத் தாக்கல்செய்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வேட்பாளருக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 6 அன்று ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் ஆணையம் உத்தரவு