கரூர் மாவட்டம், புகலூர் தாலுகாவிற்கு உள்பட்ட மேல ஒரத்தை பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் குமார். இவர் கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் வேலாயுத பாளையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்று வந்துள்ளார்.
இந்நிலையில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பரிந்துரையின் பெயரில் கரூர் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணராமன் ரூபன் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அதன் விளைவாக தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் 14, 1982இன் கீழ் ரூபன் குமார் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். மேலும், கரூர் மாவட்டத்தில் இவ்வாறான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கொரோனா பீதி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு