ETV Bharat / state

உங்களில் ஒருவனாக இருந்து சேவையாற்றுவேன் - அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் - karur latest news

கரூர்: உங்களில் ஒருவனாக இருந்து சட்டபேரவையில் சேவையாற்றுவேன் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

aravarakurichi-candidate-election-campaign

author img

By

Published : Mar 31, 2021, 8:30 PM IST

திமுக தலைமையிலான தேசிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரவக்குறிச்சி வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ க. பரமத்தி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்கூர் கஸ்பா, லட்சுமிபுரம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவர் பேசுகையில், "இத்தொகுதியில் பத்தாண்டுகளாக எனது தந்தை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியபோது இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் குடியிருக்க நிலமும் வீடும் பெற்றுக் கொடுத்தேன்.

அப்பகுதியில் நான் தற்பொழுது வாக்குச் சேகரிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் வீட்டில் நடைபெறும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று உங்களில் ஒருவனாக எனது தந்தைபோல உங்களுக்கு நான் சேவையாற்றுவேன். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை இத்தொகுதியில் உருவாக்கித் தருவேன்.

எனவே எனக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பு தாருங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களையும் உங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் உங்கள் சேவகனாக உங்கள் நலனில் அக்கறை உள்ளவனாகப் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்

இதையும் படிங்க: இழிவாகப் பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்ப

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.