தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
பிரதான சாலைகள், ரயில் நிலையங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரோனா தொற்று நாட்டில் 300க்கும் மேற்பட்டோரிடம் காணப்படுகிறது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.