கரூர்: தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற என்.ஆர். சந்திரசேகர் மீண்டும் குளித்தலைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கிருஷ்ணராயபுரம் (தனி )சட்டப்பேரவை தொகுதியில், முத்துக்குமார் போட்டியிடுகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு