ETV Bharat / state

பூட்டிக் கிடக்கும் அங்கன்வாடி மையங்கள்: போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறும் அவலம்!

குழந்தைகளின் கல்வி நிலையங்களான அங்கன்வாடி மையங்கள், ஏற்கனவே தனியாரின் ப்ளே ஸ்கூலின் வரவால் களையிழந்து காணப்படுகின்றன. இந்நிலையில், கரோனா நெருக்கடியில் அதன் பராமரிப்பற்ற நிலை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Aug 27, 2020, 4:57 PM IST

Updated : Aug 29, 2020, 1:37 PM IST

குழந்தைகள்
குழந்தைகள்

தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகளின் தொடக்கக் கல்வி பால்வாடி என்னும் அங்கன்வாடிகளில்தான் தொடங்கியிருக்கும். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் குழந்தைகளுக்கு உணவோடு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளின் அறிமுகங்களையும் சேர்த்தே ஊட்டுகின்றனர். மொழியறிவை முதலாவதாக வீட்டில் பெறும் குழந்தைகள் இங்கு சென்றுதான் அதனைப் பேசி பழகுகின்றனர். தன்னை ஒத்த குழந்தைகளுடன் நட்புடன் பழகுவது, விளையாடுவது என மழலையர்களுக்கு இது எப்போதும் விருப்பக் குடில்தான். மழலையர்களுக்கு மட்டுமில்லாது அவர்களின் பெற்றோருக்கும் இந்த மையம் பெரியளவில் உதவியாக இருக்கிறது.

எப்படி?

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் உள்ளனர். இந்த சூழலில் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுத்து, அவர்களைக் கவனித்துக் கொள்வது சிரமமாக இருக்கும். இவர்களால் ப்ளே ஸ்கூலில் குழந்தைகளை விட்டு கவனித்துக் கொள்ள முடியுமா என்றால், பெரும்பாலானோரின் பதில் முடியாது என்பதே. இவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்கான ஒரே வழி அங்கன்வாடி மையம். இங்கு குழந்தைகளை விட்டுவிட்டு, பின்னர் மாலையில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதால், அவர்கள் வேலைக்குச் செல்வதற்குப் போதிய நேரம் கிடைக்கிறது.

அங்கன்வாடி மையங்கள் என்றால் என்ன?

தாய் சேய் நல மையமான அங்கன்வாடிகளை இந்திய அரசு நடத்துகிறது. ஒன்றிணைக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் (ICDS) கீழ் ஆறு அடிப்படை சேவைகள் உள்ளன. அடிப்படைத் தேவைகளான சத்துணவு, பாலர் கல்வி, நோய்த்தடுப்பு, சுகாதார கல்வி, மருத்துவ பரிசோதனை மற்றும் இதர சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வருகிறது. இந்த ஐசிடிஎஸின் சேவைகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் திட்டம்தான் அங்கன்வாடி மையங்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டின் கணக்குப்படி, தமிழ்நாட்டில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் உதவித் தொகை பெறுவோர் உள்பட சுமாராக 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வந்தனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 52 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதுமே கரோனா நெருக்கடியில் சுழன்று கொண்டிருக்க, அங்கன்வாடி மையங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவையும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பூட்டப்பட்டன. ஆனால், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களை நம்பியிருக்கும் குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை, அவர்களையும் கவனித்துக் கொள்கிறது.

கரோனா காலத்திலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் தேவையான அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட சத்துணவுப் பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக குழந்தைகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதே போல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தின் பயனாளிகளுக்கு அங்கன்வாடி மைய ஊழியர்கள் மாதம் இருமுறை நேரடியாக சென்று இந்த பொருள்களை வழங்கிவருகின்றனர்.

அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

இப்படி, உணவுப் பொருள்களை வழங்குதல் மட்டும் போதாது, விரைவில் அங்கன்வாடி மையங்களைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கின்றனர் கரூர் மாவட்டத்தினர். இது தொடர்பாக சில பெற்றோர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், “வீட்டிற்கே வந்து உணவுப் பொருள்களைக் கொடுத்துவிடுகின்றனர். அது குறித்து எங்களுக்கு புகாரில்லை. குழந்தைகளை அதைச் சாப்பிடச் செய்வதில்தான் சிரமமே. இதே அங்கன்வாடி மையங்களாக இருந்தால் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் அமர்ந்து ஆர்வமாக சாப்பிடுவார்கள். ஆனால், வீடுகளில் அப்படியில்லை. எங்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை” என்றனர்.

அங்கன்வாடி மையங்கள்: போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறும் அவலம்!

கரூர் மாவட்டத்தில் தினக் கூலிகளாகப் பணிபுரிந்து பிழைப்பு நடத்திவரும் பெரும்பாலானோருக்கு அங்கன்வாடி மையங்கள்தான் குழந்தை பாதுகாப்பு மையம் போல செயல்பட்டு வந்தது. இந்நிலையில், முழுநேரமாக குழந்தைகளை வீட்டிலிருந்து கவனிக்க வேண்டி வருவதால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., போன்ற வகுப்புகளைப் படிக்க வசதியற்ற ஏழை மக்களின் குழந்தைகளுக்கு அங்கன்வாடி கல்விதான் பிரதானம். கடந்த கல்வியாண்டின் இறுதியிலிருந்து இந்த கல்வியாண்டின் தொடக்கத்திலும் அங்கன்வாடிகள் செயல்படாமல் இருப்பது அச்சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் கல்வி இடைவெளி என்றே பெற்றோர் கருதுகின்றனர். விரைந்து அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு வந்தால் தங்களின் பொருளாதாரம் மட்டுமின்றி குழந்தைகளின் கல்வியும் மேம்படும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோரின் கருத்தாக உள்ளது.

அங்கன்வாடி முன் மது அருந்திய அவலம்
அங்கன்வாடி முன் மது அருந்திய அவலம்

இதனிடையே, எப்போதும் பூட்டிக் கிடக்கும் அங்கன்வாடிகளை சிலர் தவறான பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் பூட்டியிருக்கும் ஒரு அங்கன்வாடி மையத்தின் படிகளில் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை விட்டுச் சென்றுள்ளனர். குழந்தைகளின் கல்வி நிலையங்களாக செயல்பட்டு வரும் அங்கன்வாடிகள், ஏற்கனவே தனியாரின் ப்ளே ஸ்கூல் வரவால் களையிழந்து காணப்படுகின்றன. கரோனா நெருக்கடியில் அதன் நிலை மேலும் வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:அங்கன்வாடி மையத்திற்குள்பட்ட இடங்களை மீட்டுத்தர வேண்டும் - அங்கன்வாடி பணியாளர்கள்

Last Updated : Aug 29, 2020, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.