ETV Bharat / state

வேலை வாங்கி தருவதாக மோசடி - அதிமுக நிர்வாகி கைது

கரூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 18, 2022, 6:17 PM IST

கரூர்: அதிமுக மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளாக சின்னகோதூர் பகுதியைச் சேர்ந்த கே.என்.ஆர் சிவராஜ் (எ) சிவக்குமார்(42), புகலூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி செந்தில் ஆகிய இருவவர் உள்ளனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் 13.12.2020 அன்று நடைபெற்ற எழுத்து தேர்வு எழுதிய திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்தால் பணி ஆணை பெற்று தருவதாக பணம் பெற்றுள்ளனர்.

பின்னர் போலி நியமன ஆணையை வழங்கியதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சுசீந்திரன் இதுகுறித்து, தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் நேரடியாக சென்று விசாரித்த போது, நியமன ஆணை போலியானது எனத் தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கடந்த அக்.7 ம் தேதி கரூர் சின்னகோதூரில் உள்ள சிவக்குமாரை சந்தித்து கேட்டபோது, தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி சுசீந்திரனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், தனக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன் பணத்தை திரும்ப பெற கேட்டபோது, மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த கரூர் நகர காவல் ஆய்வாளர் விதுன்குமார் நேற்று (அக். 17ம் தேதி) இரவு சிவராஜ் என்கிற சிவக்குமாரை(42) கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, தற்போது அதிமுக நிர்வாகி கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

. இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான புகலூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பசுபதி செந்தில் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவ்வாறு வேலை வாங்கி தருவதாக 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கரூரில் போடப்படாத சாலை தொடர்பாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்தி பதிவிட்டதாலே அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிமுகவை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - ஆட்சியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.