ETV Bharat / state

அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...! - கரூர் அதிமுக

கரூர் மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்'

author img

By

Published : Jun 26, 2021, 9:32 AM IST

கரூர்: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளாகவும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும் தேர்வுசெய்யப்பட்டவர்கள் சிலர் ஒரேநாளில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கரூர் மாவட்ட அதிமுக கடவூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமையில்

  • கடவூர் ஊராட்சி ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் தேன்மொழி,
  • அதிமுக கடவூர் ஒன்றிய இணைச் செயலாளர் கடவூர் சித்ரா,
  • கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருக்காடுதுறை ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார்,
  • குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,
  • 16 ஊராட்சி மன்றத் தலைவர்கள்

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நேற்று (ஜூன் 25) திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வையில் சேகர், கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்'
அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்'

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளையும் திமுக வசமாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்பொழுது திமுகவை வலுப்படுத்த அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திமுகவில் இணைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.