மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அஜ்மத் அலி. இவர் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். ஊரடங்கால் மும்பையில் சிக்கித்தவித்த கேரளாவைச் சேர்ந்த எட்டு பேரை அரசின் இ-பாஸ் மூலம் , கேரளாவின் வாந்தனா திட்டா என்ற பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை விட்டுவிட்டு மீண்டும் மகாராஷ்டிரா திரும்பினார்.
அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, டெம்போ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ஓட்டுநர் அஜ்மத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் பார்க்க: தமிழ்நாட்டில் கடைகள் திறக்க அனுமதி!