கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட தெலுங்குபட்டி பகுதியிலுள்ள பிச்சாண்டவர், தாமரை செல்வி தம்பதியருக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மார்ச் 10ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது.
வீடு திரும்பிய குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் பெற்றோர் தடுப்பூசி போட்ட இடத்தில் காயம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இது தடுப்பூசியில் உள்ள சிறு துண்டு என தெரிந்தவுடன் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இதையடுத்து, குழந்தைக்கு ஏற்பட்ட நிலை குறித்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தடுப்பூசி போட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உதவி மருத்துவ அலுவலர் வில்லியம் ஆண்ட்ரூசனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்து, உடைந்த ஊசி துண்டை குழந்தையின் தொடையிலிருந்து அகற்றினர்.
இதையும் படிங்க: எஜமானரைக் காப்பாற்ற நாட்டு வெடிகுண்டை கவ்விய நாய்க்குட்டி!