கரூர் மாவட்டம் தோகமலை பகுதையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகளான 17 வயது சிறுமியை அதேப்பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (32) என்பவர் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமியின் தந்தை பழனிச்சாமி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஜெயராஜ் (32), ஜெயபால் (37), பிள்ளமநாயகர் (59), காமக்காம்மாள் (54), சின்னராஜ் (25), சிவகாமி (37), தங்கவேல் (35), வெள்ளை நாயக்கர் (42), சின்னராஜ் (45), சக்திவேல் (24), மணிவேல் (24), தம்பிதுரை (42), சீலமாநாயக்கர் (80) ஆகிய 13 நபர்களையும் கைதுசெய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (அக். 23) கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், சிறுமியைக் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஜெயராஜ் (32) என்ற இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அபராதம் கட்டத் தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சீலாநாயக்கர் (80) என்ற முதியவருக்கு ரூ.1000 மட்டும் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், காமக்காம்மாள் (54), தம்பிதுரை (42) ஆகிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும், மற்ற ஒன்பது நபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.